முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் நில விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்ற தென்பகுதி இளைஞர்களை படையினர் விரட்டியடித்துள்ளனர்.
தென்பகுதியில் இருந்து, கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் தலைமையில் இரு பஸ் வண்டிகளில் சிங்கள மக்கள் கேப்பாப்புலவில் போராடும் மக்களை சந்திக்கச் சென்றுள்ளனர்.
எனினும் இதற்கு படையினர் அனுமதி வழங்காததுடன், அவர்களை விரட்டியடித்துள்ளனர் என கேப்பாப்புலவு போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஆறுமுகம் வேலாயுத பிள்ளை தெரிவித்துள்ளார்.
தமது போராட்டத்தின் நியாயத்தை அறிந்து கொண்டு எமக்கு ஆதரவாக செயற்படவும், எமது துயரங்களை அறிந்து கொள்ளவும் வந்த சிங்கள இளைஞர்களை படையினர் விரட்டியடித்ததால் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலையடைந்துள்ளதுடன், விசனம் வெளியிட்டுள்ளனர்.
Add Comments