கொழும்பு புறநகர் பகுதியில் பாரிய வெடிப்புச் சம்பவம்! பலர் பலி மேலும் சிலர் கவலைக்கிடம்...

ஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச்சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் உயிரிழந்த நான்கு பேர் பிரதேசவாசிகள் எனவும் மற்றைய நபர் தொழிற்சாலையில் வேலை செய்யும் நபர் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏனையோர் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று மதியம் குறித்த தொழிற்சாலையின் அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கியொன்றில் விழுந்த நபரை காப்பாற்ற குழுவொன்று சென்றுள்ளது.
இதன்போது ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேரும் மயக்கமுற்று தாங்கியில் விழுந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதில் ஐவர் உயிரிழந்ததுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila