வள்ளுவர் வான் புகழ் கொள்ள அவர் எழுதிய குறளைவிட...?


திருவள்ளுவர் ஆயிரத்து 330 குறட்பாக் களை நமக்குத் தந்தார். ஒரு அதிகாரத்தில் பத்து குறள்கள் என 133 அதிகாரம் அவரால் படைக்கப்பட்டது.
வள்ளுவர் தந்த திருக்குறளால் தமிழ்நாடு வான் புகழ்கொண்டது என்ற பெருமைக்குட் பட்டது.

இதை நாம் கூறும்போது, என்ன நடந்தது இன்று திருவள்ளுவர் குருபூசையும் இல் லையே என்று நீங்கள் முணுமுணுப்பதையும் உய்த்தறிய முடிகிறது.
திருக்குறளைத் தந்த வள்ளுவர் அதற்குப் பொருளும் எழுதி வைத்திருப்பாராயினும் திருக் குறளின் பெருமை வானுயர்ந்திருக்காது என்பது தான் நம் தாழ்மையான கருத்து.
இதை நாம் கூறும்போது இஃதென்ன புதுக் கதை என்றும் நீங்கள் கூறலாம். ஆனால் உண்மை அதுதான்.

திருக்குறள் ஈரடிகளைக் கொண்டது. வள்ளு வர் வாழ்ந்த சங்கம் மருவிய காலத்தில் செய் யுள் அமைப்பே தமிழ்வடிவமாயிற்று.
ஆகையால் திருக்குறளுக்கு பொருள் எழுத வேண்டிய தேவை வள்ளுவருக்கு ஏற்பட்டி ருக்க நியாயமில்லை.

ஆனால் அதுவே அவரின் வான்புகழுக்கு வழி வகுத்தது. அதாவது திருவள்ளுவர் தான் எழுதிய குறளுக்கு பொருள் தந்திருப்பாராயின் அதன்பொருளோட்டம் பல்வகைப்படாமல் ஒரு மைப் பொருள் கொண்டதாகவே இருந்திருக் கும்.

நல்ல காலம் திருவள்ளுவர் திருக்குறளுக் குப் பொருள் தராமல் தவிர்த்திருந்தார்.
எனினும் தமிழ்மொழியில் வசனநடை தலைமைத்துவம் பெற்றபோது வள்ளுவரின் திருக்குறளுக்குப் பலரும் பொருள் எழுதினர்.

இப்பொருள் வள்ளுவர் நினைத்திராத பொருளையும் உன்னதமாகத் தந்தது.
இதன்காரணமாகவே திருக்குறள் உலகப் பொதுமறையாக ஆவதற்கும் வள்ளுவன் வான் புகழ் கொண்ட தமிழனாகப் போற்றப்படு வதற்கும் வழிவகுத்தது.
ஆக, திருக்குறளுக்கு பொழிப்புரை எழுதிய புண்ணியவான்கள் தத்தம் மெய் அறிவுக்கும் அறச் சிந்தனைக்கும் அமைய தங்கள் உன் னதமான விளக்கத்தை திருக்குறளுக்குக் கொடுத்தனர்.

இதன்காரணமாக திருக்குறள் கூறாத விட யம் எதுவுமில்லை என்று உலகம் போற்றுகி றது. இதைநாம் கூறும்போது இதெல்லாம் எதற்காக? என்ற சந்தேகம் உங்களிடம் ஏற் படவே செய்யும். 
இங்குதான் ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும்.
அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் வாதிகள், ஆட்சிபீடத்தில் இருப்பவர்கள் ஒரு கருத்தை அல்லது ஒரு சிந்தனையை மையப் படுத்தி தமது செயற்பாட்டை முன்வைப்பர்.

இதற்கு அரசியல் ஆய்வாளர்கள் என்றி ருப்போர் முன்வைக்கின்ற கருத்துக்களையும் விமர்சனங்களையும் பார்க்கும்போது, அடடா! இப்படியா என்று பொதுமக்கள் நினைப்பர்.
ஆனால் உண்மையில் ஆய்வாளர்கள் முன் வைத்த விமர்சனத்துக்கும் குறித்த அரசியல் வாதியின் சிந்தனை நோக்குக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது.
என்ன செய்வது இல்லாததை இருப்பதாக உருவாக்கியபோதுதான் பேய்க்கதைகள் நம் மத்தியில் வந்ததாம்.

அதுபோலத்தான் தேவையில்லாத அரசி யல் விமர்சனங்கள் இருக்கின்ற அரசியல் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடுகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila