மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
|
மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் 10 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர். ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ்சோம தேவா தலைமையிலான குழுவினர, விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் சட்டத்தரணிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்ததோடு யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துகொள்ளப்பட்ட நிலையில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வந்தது.
தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அகழ்வு பணிகளின் போது மனித எலும்புகள், மண்டையோடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அகழ்வுப் பணிகள் மன்னார் நீதிவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
மன்னார் மனித எலும்பு அகழ்வுப் பணி இடைநிறுத்தம்!
Add Comments