வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் சிங்கள மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை தொழிலை தடை செய்யுமாறு வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
|
மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பகுதியில் தங்கியிருந்து வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தை உள்ளுர் மீனவர்கள் இன்று காலை 8 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள், அலுவலகத்துக்குள் செல்ல முடியாது தடுக்கப்பட்டனர். எனினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் யாழ். நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை தாம் கைது செய்வதாக நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய உத்தரவாதத்தையடுத்தே போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் சுகிர்தன், சிவயோகம், தர்மலிங்கம், கஜதீபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
|
யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் திணைக்களத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்!
Add Comments