மதஸ்தலங்கள் மீதும், பொது மக்கள் மீதும், சிறுவர்கள் மீதும், மதத்தலைவர்கள் மீதும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவத்தின் சூத்திரதாரி எனப்படும் மகாசேன பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த சம்பவத்தில் அட்டகாசம் செய்த பலர் இன்னும் பொலிஸில் சிக்காமல் தலைமறைவாகி உள்ளனர்.
அந்த வகையில் கண்டி வன்முறையின் போது ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் பள்ளிவாசலை உடைக்கும் காட்சி காணொளி மூலம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த பெண் திகன - கெங்கல்ல ஜூம்மா பள்ளிவாசல் மீது கல் எறிந்து தாக்கி அட்டகாசம் செய்திருந்தார்.
எனினும் அவர் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் நொச்சியாகம பொலிஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
நீண்ட நாட்களின் பின் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மேலதிக நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.