ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் என விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்சியில் தெரிவித்துள்ளார் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு தெற்கில் பலத்த எதிர்ப்புக்கள் வெயிடப்பட்டு வருகின்றன இந் நிலையில் விஐயகலாவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான ரஞ்சன் நாமயாக்க தாம் நடத்திய ஊடக சந்திப்பின் போது வியகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதனை ஊடகங்களுக்கு நேரலையில் விட்டிருந்தார். இது குறித்து இன்று தனியார் தொலைக்காட்சியொன்றுக்கான நேர்காணலை விஐயகலா இன்று வழங்கியிருந்தார்.
|
அதன் போது..
கேள்வி- ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நாடாத்தி உங்களுடன் (விஜயகலா) தொலைபேசியில் பேசும் போது அவுட்ஸ்பீக்கரில் ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பது தெரியுமா? பதில்-- அவர் ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவையில்லை. நான் இன்று பிரச்சினைகள் முடிந்த பின் டான் தொலைக்காட்சிக்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்திருக்கு அதற்கு ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு கொண்டுவர அவசரம் இல்லை.
அவர் பாராளுமன்றத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் சிநேகித அடிப்படையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன் அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு தெரியாது இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியை அவட்ஸ்பீக்கரில் வைத்து கதைப்பது தெரியாது அவர் வைத்த பின் எனக்கு வந்த அழைப்பின் ஊடாகவே கேட்டறிந்தேன். பின்னர் நான் அந்த வீடியோ பதிவினை பார்த்திருந்தேன் இது உண்மையிலேய எனது சிறப்புரிமையை மீறல்.
இவர் ஒரு பெண்ணை துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எப்படி துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது இப்படியானவர்கள் தான் இந்த பாராளுமன்றில் இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எப்படி பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் செவிமடுக்க இயலும் .
பாராளுமன்ற உறுப்பினராகிய ரஞ்சன் ராமநாயக்க முற்றுமுழுதாக நூற்றுக்கு 52 வீதமாக பெண்கள் வாழுகின்ற இடத்திலேயே துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே நான்உண்மையில் வெளியில் கொண்டுவரவிரும்புகின்றேன். இதற்கான நடவடிக்கையை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்து எனது சிறப்புரிமை மீறல் .
அதேவேளை, கணவனை இழந்து தனிய வாழ்ந்து கொண்டிருக்கும் வேளைகளில் என்னுடைய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாககத்தான் அது இருக்கின்றது. அதை நான் உரிய இடங்களுக்கு நான் சமர்ப்பிப்பேன் - இவ்வவாறு பல விடயங்கள் தொடர்பிலும் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவித்தார்.
|
ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம்: - விஜயகலா
Related Post:
Add Comments