குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ளள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 18ஆண்டுகளாக இந்த மண்ணில் தமிழ்த்தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி, தமிழினம் இன்றைக்கு வரைக்கும் அனுபவித்துக் கொண்டிருக்ககூடிய கடும் நெருக்கடிகளுக்கும் காரணகர்த்தாகளாக இருந்த டி.எஸ்.சேனநாயக்க, டட்லி சேனநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாஸ, ஆகிய தலைவர்கள் வரிசையில் எந்த விதத்திலும் குறைந்து விடாத தமிழ் விரோத சிந்தனை மிக்க ரணில் விக்ரமசிங்கவின் கட்சியில் நேரடிப்பிரதிநிதியாக, அவருடன் சேர்ந்து உழைத்தனர்.
இந்த மண்ணில் 1952இல் தமிழினத்தலைவர் தந்தை.செல்வாவின் வெற்றியைப்பறித்து பாராளுமன்றம் சென்று தபால் தந்தி அமைச்சராக இருந்த சு.நடேசபிள்ளைக்குப்பிறகு ஐக்கிய தேசியக்கட்சிக்கு கடந்த 2000, மற்றும் 2001களில் நடந்த பொதுத்தேர்தல்களில் யாழில் ஒரு நேரடிப்பிரதிநிதித்துவத்தைப்பெற்றுக்கொடுத்து சிங்களத்தேசியக்கட்சிகள் மீது தமிழ் மக்கள் பரிவோடு இருப்பதைப் போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்திய
நன்றிக் கடனுக்காகத்தன்னும் அமரர்.தி.மகேஸ்வரனுக்கு கடைசிவரை ஒரு பொறுப்பான அமைச்சுப்பதவி வழங்கப்படவே இல்லை.
இத்தனைக்குப் பிறகும் அந்த அணியின் வெற்றிக்காகவே இன்றைக்கு வரைக்கும் பாடுபட்டது மாத்திரமல்லாமல், நூற்றுக்கு நூறுவீதம் தமிழ்மக்கள் வாழும் எங்களுடைய கிராமங்கள் வரை பல்வேறான உத்திகளைப்பயன்படுத்தி சிங்கள தேசியக்கட்சியை கொண்டு சேர்த்துள்ளது.
நச்சுவிதையை எமது தூய வளமான மண்ணிலே ஊன்றி, தன்னால் முடிந்தவரை சிங்கள மேலாதிக்கத்தை எமது மக்களை ஏற்கச்செய்வதுக்கு கடுமையாக உழைத்தமைக்கான சிறு நன்றி கூட இல்லாமல், சிங்கள பேரினவாதமானது தனது கோர முகத்தை தோலுரித்துக்காட்டியுள்ளது.
உங்களுடைய கட்சியின் சகாக்களே உங்களை பைத்தியக்கார வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் எனச்சொல்லும் வகையிலும், தனிப்பட்ட தொலைபேசி அழைப்பினை பகிரங்கமாக ஒலிபரப்பும் அளவுக்கும் அநாகரிகமான செயற்பாடுகளில் ஈடுபட்டது.
பின்னர் நீங்கள் அந்த அணியிலேயே தான் தொடர்ச்சியாக தொடருவீர்களேயானால் உங்கள் மீது இன்றைக்கு உண்மையை தெரிந்தோ, தெரியாமலோ உரக்கச்சொன்னீர்கள் என்பதான நல்லபிப்பிராயம் மண்ணாகிப் போய்விடும்.
எந்தக்காலத்திலும் சிங்களப்பேரினவாதமானது தங்களுக்கு எவ்வளவு நன்மை செய்தாலும், தங்களது தவறுகளை எவ்வளவு நியாயப்படுத்தினாலும் மகாவம்ச சிந்தனையின் வழி நின்றும் தமது மேலாதிக்கப்போக்கினில் நின்றும் மாறப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்டு தமிழர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்தனை ஆண்டுகளாக சிங்களப்பேரினவாதம் தமிழ் மண்ணில் உள் நுழைவதுக்கு கதவு திறந்து வைத்தமைக்கான பிராயச்சித்தத்தைசெய்து, செய்ந்நன்றி மறந்த சிங்கள பேரினவாதத்தை நிராகரித்து உங்களுடைய அரசியலை தமிழ்த்தேசியம் சார்ந்த பாதையிலே செப்பனிட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய எதிர்பார்ப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.