மறுபுறம் தமிழ் மக்களின் உரிமை மீட்பர்களாகிய இவர்கள், மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை, குப்பையும் கொட்ட முடியாது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரிடமே அதிகாரம் குவிந்திருக்கிறது, பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு உரிமைகளை ஒருபொதும் வழங்க மாட்டாது என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் புரட்சியில் புரல்கிறார்கள்..
1987ல் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையில் முதலமைச்சரின் ஆலோசனை இன்றி, அனுமதி இன்றி மாகாண சபைகளை ஆளுநர் கலைக்க முடியாது என இருந்த சட்டமூலத்தை, அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி றணசிங்க பிரேமதாஸவின் காலைப் பிடித்து, 1989ல் அந்த சட்ட மூலத்தை மாற்ற நாமே காரணமானோம்…
அப்போதும் தமிழருக்கு மூக்குப் போனாலும் பாறவாயில்லை ஈபிஆர்எல்எவ் அமைப்பிற்கும், இணைந்த வடகிழக்கின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாளுக்கும் சகுணம் பிழக்க வேண்டும் என நினைத்தார்கள். ஒவ்வாரு தடவையும் தொலை நோக்கு சிந்தனை இன்றி, தனி நபர் முரண்பாடுகளுக்கும், குழுசார்ந்த, அல்லது அமைப்பு சார்ந்த முரண்பாடுகளுக்கும் தமிழ் மக்கள் பலியாக்கப்பட்டுகொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய தீர்ப்ப்பும் தமிழ் அப்புக்காத்துவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழ் மக்களுக்கு எதிரான தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது. செப்டம்பரில் கலைந்து போகப் போகும் மாகாண சபைக்யின் பதவிக்காக, தனிப்பட்ட விக்னேஸ்வரனை பழிவாங்குவதாக நினைத்து மற்றும் ஒரு வரலாற்றுத் துரோகம் இழைக்கப்பட்டு இருக்கிறது.
அதனை தமிழ்இளைஞர் பேரவையில் இருந்து இப்போதுவரை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் எனக் கூறும் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் வரவேற்று, விக்கியை பதவி விலகக் கோரியிருக்கிறார்…
முதலமைச்சரிடம் எஞசியிருக்கும் அதிகாரங்களையும் விட்டு வைக்கக் கூடாது… யாராவது உச்ச நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்து, ஆளுநரிடம் மாகாண சபையை ஆளும் முழுமையான அதிகாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இதற்கும் தமிழ் அப்புகாத்துமார் யாராவது முனைந்தால் தமிழ் மக்கள் இலங்கையின் மத்திய அரசின் கீழ் மகிழ்வாக வாழ பழகிக் கொள்வார்கள்…..