ஒரு பெரும் தியாகத்தை நடத்திக் காட்டிய தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை.
இந்த நாட்டில் மட்டுமல்ல; உலகில் எங்கும் காணமுடியாத தியாகத்தைச் செய்து காட்டிய எங்கள் தியாகி திலீபனின் தியாகத்தின் உச்சம் 31 ஆண்டுகளை நிறைவு செய்கின்றவேளை, எங்கள் தமிழினத்தின்போக்கு எப்படியாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, அந்தப் பார்த்தீபனின் புனிதமான ஆத்மா எப்படிக் கலங்கும் என்பதை ஒருக்காலேனும் நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும்.
அதிலும் குறிப்பாக எங்கள் தமிழ் அரசியல் தலைமையின் போக்கு பித்தலாட்டம் நிறைந்த தாக மாறிவிட்டது.
சொந்த நலன்களுக்காக இனத்தை விற் றுப் பிழைக்கும் கொடுமை தாண்டவமாடுகிறது.
சொந்த அரசியலுக்காக தமிழ் மக்களுக் குக் கிடைத்த வடக்கு மாகாண சபையைக் குழப்பி அதன் உச்சமான செயற்பாட்டுக்கு குந் தகம் செய்தவர்களை என்னவென்று சொல்வது.
அரசியல் பதவி என்ற பெயரால் எறியப்படும் ரொட்டித்துண்டுக்காக அறம் மீறியவர்களால் எங்கள் வடக்கு மாகாண சபையின் உச்சமான செயற்பாடுகள் பலத்த சவாலை எதிர்கொண் டது என தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளார் எனும்போது,
வடக்கு மாகாண சபையைக் குழப்பியவர்கள் செய்த அட்டகாசங்கள் எவ்வாறாக இருந்திருக்கும் என்பதைக் கணித்துக் கொள்வதில் எம் மக்களுக்கு இடைஞ்சல் இருக்க முடியாது.
இவை ஒருபுறம் இருக்க, எங்களிடம் இருக் கக்கூடிய குழப்பங்கள், ஒற்றுமையீனங்கள், அரசியல் பிளவுகள் என்பவற்றைக் காரணம் காட்டி தென்பகுதி அரசியல்வாதிகள் தங்களை ஒற்றுமைப்படுத்திக் கொள்கின்றனர்.
தவிர, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமைக்கு தமிழ் அரசியல் தரப்புகளின் ஒற்றுமையீனமே காரணம் என இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
எந்தத் தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காத ஓர் அரசு கூறுகிறது; தமிழ் அரசியல் தரப்புகளி டம் ஒற்றுமை இல்லை. அதனால்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதுள்ள தென்று.
என்ன செய்வது! தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததால்; பிரதமருக்கு எதிரான நம் பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து முறி யடித்ததால் தமிழ் அரசியல் தரப்பிடம் ஒற் றுமை இல்லை என்று பிரதமர் கூறுகிறாரா என் பதை கூட்டமைப்புத்தான் அறிந்து சொல்ல வேண்டும்.
எதுஎவ்வாறாயினும் எங்களிடம் இருக்கின்ற ஒற்றுமையீனத்தை, முரண்பாட்டை, விலைபோதலைச் சுட்டிக்காட்டி தமிழர்களுக் குத் தீர்வு கொடுக்க முடியாது என்று சிங்கள ஆட்சியாளர்கள் சர்வதேசத்திடம் கூறினாலும் அதுபற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை.