‘சர்வதேச சமூகம்’ இலங்கையில் தமிழ்மக்களுக்கான அதன் சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருவதாக பிரபல பிரித்தானிய ஊடகவியலாளரும் சனல் 4ல் வெளியான இலங்கையின் கொலைக்களங்கள் விவரணக் காணொளியின் இயக்குநருமான கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதுடன் பின்னர் அடுத்தாண்டு மார்ச் மாத ஜெனிவா அமர்வின் போது இந்த யோசனையை பிரேரணையாகக் கொண்டுவரத்திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்றிற்கு பதிலளிக்கையிலேயே கலம் மக்ரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.