![]()
மன்னார் 'சதொச' வளாக மனிதப் புதைகுழியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
|
மன்னார் 'சதொச' வளாக மனிதப் புதைகுழியில், இன்று 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன. இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் இந்தச் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.
|
மன்னார் புதைகுழியில் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக் கூடு!
Add Comments