மக்கள் பணிக்காக வாழ்ந்த மாமனிதர் பரமநாதன்



 நம் மண்ணின் மிகச்சிறந்த சமூக சேவை யாளராக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த சுப்பிரமணியம் பரமநாதன் அவர்கள் 11.12.2017 அன்று திடீர் மரண மடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை தருவதாகும்.

அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. உடுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் தெல்லிப் பழை கொல்லங்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட  பரமநாதன் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைசார் விடயத்திலும் ஏழை மக்களின் நலன்களிலும் மிகுந்த அக்கறை கொண்ட வர். தன் வாழ்நாள் முழுவதையும் மக்கள் பணிக்காகச் செலவிட்ட உத்தமர் அவர்.  

தனக்காகவும் தன் வீட்டுக்காகவும் உழைப்ப வன் மனிதன். தனக்காகவும் தன் வீட்டுக்காகவும் சமூகத்துக்காகவும்  உழைப்பவன் மாமனிதன் என்றான் ஓர் அறிஞன்.

அந்த அறிஞனின் வரையறையைக் கடந்து தன் வாழ் நாளில் பெரும் பகுதியை மக்கள் பணிக்காகச் செலவிட்டவர் சு.பரமநாதன் அவர்கள் என்றால் அது உண்மையாகவே சத்தியவாக்கு என்பேன். 

மொழிச்சுருக்கம் கருதி சமூக செயற்பாட்டா ளர் என்று அவரைக் கூறினாலும் வடபுலத் தின் முக்கியமான பொது அமைப்புக்களின் அடி அத்திபாரமாக, வைரத் தூணாக விளங்கிய வர் பரமநாதன் என்றால் அது மிகையன்று.

சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்கு மான மக்கள் குழுவின் செயலாளராக, அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதி யாக, இந்து அமைப்புக்களின் ஒன்றியச் செய லாளராக, வலி.வடக்கு மீள்குடியேற்றத்தின் முக்கிய குரலாக இருந்த பரமநாதன் அவர் களின் உறக்கமும் விழிப்பும் சமூகப் பணி என்ற நினைப்போடுதான் இருந்தது.

மனிதநேயத்தை மதிக்கின்ற பெருந்தகை அவர். எவரையும் நிந்திக்கத் தெரியாத, கடிந்து பேசத் தெரியாத பரமநாதன் அவர்கள் படை யினர் சார்ந்த கூட்டங்களில் சமூகப்பிரதிநிதி யாக கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில்; அச்சமற்றவராக, தான் நினைத்த கருத்தை எழுந்து நின்று துணிந்து பேசுவது கண்டு வியந் தவர்கள் பலர்.

வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை நினைக்கும்போது, 

பரமநாதன் அவர்கள் ஒரு தமிழ் அரசியல் வாதியாக இருந்திருந்தால், பாராளுமன்றத் துக்கு அவரை நாம் அனுப்பி வைத்திருந்தால் அவரின் ஆங்கில மொழிப் புலமையும் நேர்மை யும் உள்ளத்தூய்மையும் எங்கள் மண்ணுக்கு நிச்சயம் எழுச்சியைப் பெற்றுத் தந்திருக்கும்.

அரசியல் பிரவேசம் என்ற சிந்தனைக்கு அறவே இடம்கொடாத பரமநாதன் அவர்கள் அறத்தை காப்பாற்றுவது என்றால், மக்களுக்கு சேவை செய்வது என்றால், மதத் தலை வர்களுடன், புத்திஜீவிகளுடன், மக்கள் சமூ கத்துடன் இணைந்து சேர்ந்து சேவையாற்று வதே ஒரே வழி என்று நினைத்தார்.

தான் எடுத்த முடிவை தன் உயிர் பிரியும் வரை செய்து முடித்தார். எங்கு சென்றாலும் தமிழ் மக்களின் நலன், வலி. வடக்கின் மீள் குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்கள் இவை பற்றிய பேச்சும் சிந்தனையுமாகவே அவரின் முழுச்செயற்பாடும் இருந்தது.

சுருங்கக்கூறின் பரமநாதன் அவர்கள் தன்னை சமூக சேவைக்காக  முழுமையாக அர்ப்பணித்தார்.

எவராலும் நிந்திக்கப்படாத அந்த மாமனிதர் நம் மண்ணுக்கு - நம் மக்களுக்கு ஆற்றிய சேவை என்றும் நன்றிக்கும் நினைவு கூருத லுக்கும் உரியதாகும்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila