சீ.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் விலகல் : நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு
வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பா.டெனீஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உயர் நீதிமன்ற நீதியரசர் L. T. B. தெஹிதெனிய அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வணசுந்தர, பிரசன்ன ஜயவர்தன மற்றும் L. T. B. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த வழக்கிலிருந்து தாம் விலகுவது தொடர்பான அறிவித்தலை உயர் நீதிமன்ற நீதியரசர் L. T. B. தெஹிதெனிய விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Add Comments