
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் கோத்தபாயவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் இந்த கைது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சதி முயற்சியின் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா இருப்பதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் இயக்குனர் நாமல் குமார குறிப்பிட்டார்.
அவர் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் ரணில் கைது செய்யப்படவுள்ளார் என குறித்த பிரபலம் கூறியுள்ளார்.
தனது வீட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி நாமல் குமார இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பாளர்கள் மற்றும் உத்தியோகபூர்வ வாகனம் அவரிடம் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியின் பின்னணியில் அதிமுக்கிய பிரபலம் ஒருவர் இருப்பதாகவும் அவரின் பெயரை வெளியிட்டால் முழு நாடும் அதிர்ச்சி அடையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.