
ஜனாதிபதி மற்றும் கோத்தபய ராஜபக்ஷ கொலைச் சதி விவகாரம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் பூஜிதவிடம் நீண்ட விசாரணை இன்று நடத்தப்பட்டுள்ளனர்.
குற்ற புலனாய்வு அதிகாரிகளினால் நீண்ட நேரம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சதித்திட்டம் தொடர்பில் விசாரணைகளை மிக துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட அனைத்து பிரதிப் பொலிஸ்மா அதிபர்களையும் நாளை காலை ஜனாதிபதி அவசரமாக சந்திக்கிறார்.
ரணிலின் ஆட்சியில் நடந்த மோசடிகளை கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப்போவதாகவும் ஜனாதிபதி இன்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் மீது கடும் அழுத்தம் பிரயோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.