தமிழீழ மாவீரர் நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் கப்டன் வெண்ணிலவன், கப்டன் பேரின்பன், லெப் செந்தமிழ்ச்செல்வன் ஆகிய மூன்று மாவீரர்களின் தாய் அவர்கள் கோப்பாயில் முதன்மைச்சுடரை ஏற்றினார்.
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் சுடரேற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.