அந்தவகையில் தாயகப் பிரதேசமான முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்திலும், மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
மேலும் சரியாக மாலை 06.05மணிக்கு முதன்மைச் சுடர் ஏற்றப்பட, ஏனைய மாவீரர்களின் உறவுகளால் சமநேரத்திலேயே ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டன.
அத்துடன் மாவீரர்களின் உறவுகள் பூத்தூவி, கண்ணீர் சொரிந்து தமது உறவுகளான மாவீரச் செல்வங்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் மாவீரர்களின் உறவினர்களோடு, மக்கள் சார்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















