வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவு யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதற்கமைய நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றன.
இதன்போது மாவீர்ரகளுக்கு அகவணக்கம் செலுத்தி தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.