கஸ்பாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்த அவர், கடந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொண்டமையால் பெரிதும் ஏமாற்றமடைந்ததாக கூறினார்.
இதன் காரணமாக 2015 ஜனவரியில் ஜனவரி மாதம் இலங்கையில் ஜனநாயகத்தை பேணும் தலைவராக பொறுப்பேற்ற ஜனாதிபதி, அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சில சதித்திட்ட வேலைகளில் ஈடுபட்டதை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.