இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!தற்போது மோசடியான முறையில் பரிமாறப்படும் மின்னஞ்சல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் பரிமாற்றல்கள் இடம்பெற்று வருவதகாக வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, இந்த மோசடி இடம்பெற்று வருகிறது.
ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தால், அவ்வாறான எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தப் போலி மின்னஞ்ஞல் சம்பந்தமாக, அனைத்து நிதி நிறுவனங்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் அறிவித்தல் எனத் தெரிவித்து மின்னஞ்சல் ஏதும் கிடைத்தால், அந்த மின்னஞ்சலை திறந்துப் பார்க்க வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
போலியான மின்னஞ்சல் ஊடாக தீங்கிழைக்கும் இணைத்தளங்கள் இணைக்கப்படுவதுடன் தீங்கிழைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்யுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நடைபெறுகின்ற திருட்டு முயற்சி பற்றி அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்பிலான சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களை (Attachments) திறப்பதனையும் அல்லது அதில் காணப்படுகின்ற தொடர்புகளை(Links) அழுத்துவதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila