கேப்பாபிலவில் உண்மை முகத்தைக் காட்டிய இராணுவம்!


வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்,தமிழ் மக்களுக்கு நல்லவற்றையே செய்கின்றனர், உதவிகளை வழங்குகிறனர் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படும் நிலையில், நேற்று கேப்பாபிலவில் காணிகளுக்காகப் போராடிய மக்களுக்கு குடிப்பதற்கு  தண்ணீரைக் கூட வழங்குவதற்கு இராணுவம் மறுத்துள்ளது.
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர்,தமிழ் மக்களுக்கு நல்லவற்றையே செய்கின்றனர், உதவிகளை வழங்குகிறனர் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படும் நிலையில், நேற்று கேப்பாபிலவில் காணிகளுக்காகப் போராடிய மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீரைக் கூட வழங்குவதற்கு இராணுவம் மறுத்துள்ளது.
இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகமாகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்து வீதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்த கேப்பாபிலவு மக்கள் நேற்று 700ஆவது நாளில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளுக்கு முன்னால் போராடினர். கடந்த காலங்களில் இராணுவ முகாமுக்கு முன்னால் குடிதண்ணீர்த் தாங்கி ஒன்று வைக்கப்பட்டு அதில் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அது நிறுத்தப்பட்டது.
தமக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத்தரக் கூடாது என்ற நோக்கத்துடனேயே இராணுவம் குடிதண்ணீர்த் தாங்கியை அப்புறப் படுத்தியுள்ளது என்று போராடும் மக்கள் குற்றம் சாட்டினர்.
குடிதண்ணீர் இல்லாது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்வார்கள் என்ற நோக்கத்துடனேயே இராணுவம் தாங்யை நகர்த்தியுள்ளது. எனினும் நாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. வெளியில் நீண்ட தூரம் சென்றாவது தண்ணீரை எடுத்து வந்து அருந்திப் போராட்டத்தை தொடர்வோம் என்று போராடும் மக்கள் தெரிவித்தனர்.
கடந்த முறை நடந்த வெள்ளப்பெருக்கின் போது வெள்ளம் புகுந்த மக்களுடைய பகுதிகளுக்குச் சென்ற இராணுவம் அந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியிருந்தது. வயோதிபர்களை தோளில் தூக்கிச் சுமந்து சென்றார்கள், வெள்ளம் புகுந்த குடிதண்ணீர்க் கிணறுகளைத் துப்புரவு செய்தார்கள் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்தன.
எனினும் இராணுவம் தங்களுக்கு எதிராக மக்கள் உரிமையோடு போராடுகின்ற போது அடிப்படைத் தேவையான குடிதண்ணீரையே கொடுக்க மறுக்கிறது என்பது அதனுடைய உண்மை முகத்தை எடுத்துக் காட்டியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila