வவுனியா கல்மடு இரண்டாம் படிவத்தில் இன்று (25) மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டதோடு மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் மூன்று மாவீரர்களின் தாயாரால் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் மலர் அஞ்சலியும் இடம்பெற்று இருந்தது.
இதேவேளை, மாவீரர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் பிரதேச பகுதியில் உள்ள சம்பூர் கலாசார மண்டபத்தில் நேற்று (24)இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்துக்கொண்டுள்ளார்.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் குடும்ப உறவுகள் கௌரவிக்கப்பட்டார்கள். 350 தென்னங்கன்றுகள் வழங்கி அவர்களின் நினைவாக நினைவஞ்சலி செலுத்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
ஈகை சுடரேற்றி அக வணக்கமும் மாவீரர்களுக்காக இதன்போது செலுத்தப்பட்டன. மாவீரர் நினைவஞ்சலி தினமானது நவம்பர் 21-27 வரை அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.