வைத்தியசாலை பாதுகாவலருடன் முரண்பட்ட அர்ச்சுனா!
Posted by : srifm on Eelanila, latest News On 01:11:00
யாழ்ப்பாணம் வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் பாதுகாவலருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த காவலர், தன்னை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்ததாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், பாதுகாவலரின் கையடக்க தொலைபேசியை தன்னிடம் ஒப்படைக்குமாறும் தன்னை எவ்வாறு காணொளி எடுக்க முடியும் எனவும் அர்ச்சுனா இதன்போது விவாதம் செய்துள்ளார்.
அத்துடன், குறித்த பாதுகாவலர் அந்த இடத்திலிருந்து செல்ல முற்பட்ட போது அர்ச்சுனா அவரை இடைமறிப்பதையும் காணொளியில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அதிகமாக சர்ச்சைகளில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add Comments