தமிழரசு கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க சவால்
Posted by : srifm on Daily News, Eelanila, latest News On 03:58:00
தில் இருந்தால் வழக்கை மீளப்பெற்று தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுவை கூட்டுங்கள். மத்திய குழுவை அரசியல் மாபியாக்களின் கூடாரமாக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி.சிவமோகன் சவால் விடுத்துள்ளார்.
வவுனியாவில் இன்று (10.01.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர், "கட்சியின் யாப்பே அதன் முதுகெலும்பு. அதன் கொள்கைகள் அது பயணிக்கும் வளித்தடம். அந்த அடைப்படையில் ஒரு கட்சியை நிர்மூலமாக்குவதற்கு யாப்பை மீறி செயற்பட்டால் அதனை முடக்கலாம். இன்று எமக்கான சந்தேகம் இதுவே.
திருகோணமலையில் கட்சி மீது தொடரப்பட்ட வழக்கின் மூலம் எமது பொதுச் சபையானது முடக்கப்பட்டுள்ளது. அப்போது இனி மேல் யாப்பு மீறல் செய்ய மாட்டோம் என்று பேசப்பட்டது. ஆனால் மீண்டும் அதே யாப்பு மீறலை மத்தியகுழு செய்கிறது என்றால் இதன் நோக்கம் என்ன?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
Add Comments