பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள்: - மனோ கணேசன்


கண்டி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் தமிழ் மக்களை பயமுறுத்தி வாக்களிப்பில் இருந்து அவர்களை தடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழர்களின் வாக்கு தனக்கு எதிராகவே விழும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்கு அறிந்துள்ளார். பயமுறுத்தல், பகிஷ்காரம் என்ற இரண்டு வழிகளை பயன்படுத்தி, அரசாங்கம் வடக்கில் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த ஜனநாயக விரோத முயற்சிகளுக்கு எதிரான மாற்று திட்டங்களை நாம் முன்னெடுப்போம். 
கண்டி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை மாவட்டங்களின் சில இடங்களில் தமிழ் மக்களை பயமுறுத்தி வாக்களிப்பில் இருந்து அவர்களை தடுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தமிழர்களின் வாக்கு தனக்கு எதிராகவே விழும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்கு அறிந்துள்ளார். பயமுறுத்தல், பகிஷ்காரம் என்ற இரண்டு வழிகளை பயன்படுத்தி, அரசாங்கம் வடக்கில் தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கான இரகசிய திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த ஜனநாயக விரோத முயற்சிகளுக்கு எதிரான மாற்று திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.
       
இத்தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை முடிவு எடுக்காவிட்டாலும்கூட, அனைவரையும் கட்டாயம் வாக்களிப்பில் கலந்துக்கொள்ள அழைப்பு விதித்திருப்பது மகிழ்சியை தருகிறது. பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இது என் கோரிக்கையல்ல. தமிழ் மக்களின் மனசாட்சியை அறிந்துள்ள எனது நம்பிக்கை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பகிஷ்கரிப்பு கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, அக்கட்சியின் தொடர்சியான தமிழ் தேசிய நிலைப்பாட்டை நான் புரிந்துக்கொள்கிறேன். இதற்கும் மகிந்த அரசுக்கும் தொடர்பு இல்லை.
ஆனால், மகிந்த அரசு பகிஷ்கார கோரிக்கையையும்கூட தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிடும் தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழர்களை பொறுத்தவரையில் இந்த அரசின் கொள்கை இரட்டை வழிமுறைகளை கொண்டது. இது பற்றி அறிந்துள்ள நாங்கள் இதற்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவை பற்றி உரிய வேளையில், உரிய முறையில் மக்களுக்கு அறிவிப்போம்.
ஒன்று, எதிரணிக்கு வாக்கு விழும் என்ற சாத்தியங்களை கொண்ட இடங்களில் பயமுறுத்தல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி வாக்களிப்பில் இருந்து தமிழ் வாக்காளர்களை தடுத்து நிறுத்தும் முயற்சி திட்டமிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் இடங்களிலும் நடைமுறையாக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய வழிமுறையைத்தான் இவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி தொகுதியின் பெருந்தோட்ட பகுதிகளில் நடைமுறைபடுத்தினார்கள். அதன்மூலம் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை பறித்தார்கள்.
அடுத்தது, தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக வடக்கில், மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் ஒன்றுதான், மாற்றம் எதுவும் வராது, வாக்களிப்பில் பயனில்லை, இது சிங்கள நாட்டு தேர்தல், என்ற மாதிரியான சிந்தனையோட்டத்தை பரப்பிடும் இரகசிய பிரச்சாரம், சமூகதள ஊடகங்கள் மூலமாகவும், வேறு சில அடையாளம் காணப்பட்ட ஊடகங்கள் மூலமாகவும், சில தனிநபர்கள் மூலமாகவும் முன்னெடுக்கப்படுகிறது.
எதிரணிக்கு வாக்களிக்கவுள்ள தமிழ் வாக்காளர்களை வாக்களிப்பில் இருந்து தடுத்து நிறுத்த இத்தகைய இரட்டை வழி திட்டங்களை திட்டமிட்ட முறையில் அரசு முன்னெடுகின்றது. இவை பற்றி தமிழ் வாக்காளர்கள் நாடு முழுக்க எச்சரிகையாக இருக்க வேண்டும். பயமுறுத்தலையும், பகிஷ்கார கோரிக்கையும் மீறி தமிழ் மக்கள் மாற்றத்தை வேண்டி வாக்களிக்க தயாராக இருக்க வேண்டும். நமது வாக்காளர்களுக்கு நாம் துணையிருப்போம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila