திடீரென படகு மூலம் பயணிப்பதை இராணுவத்தினர் இன்று தடைசெய்தனர். இதன்போதே பயணிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வெள்ளத்தில் மூழ்கியுள்ள மூதூர் பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் இராணுவத்தினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேசத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இடம்பெறும் கூட்டத்துக்கு மக்கள் செல்வதைத் தடுப்பதற்காகவே இராணுவத்தினர் படகு சேவையை தடைசெய்துள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |
மைத்திரியின் கூட்டத்துக்கு பொதுமக்கள் செல்வதை தடுப்பதற்காக கிண்ணியாவுக்கான போக்குவரத்தை தடை செய்த படையினர்!
Related Post:
Add Comments