தேர்தல் மேடையில் பாடல் பாடி வரும் பிரதி அமைச்சரை காவல்துறையினர் தேடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வந்துராம்ப காவல் நிலையத்திற்கு பலவந்தமாக பிரவேசித்து சந்தேக நபர்களை சொந்த வாகனத்தில் ஏற்றி நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிசாந்த முத்து ஹெட்டிகமவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், முத்துஹெட்டிகமவை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரதி அமைச்சரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட முயற்சிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தலைமறைவாகி உள்ளதாகவும் காவல்தறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், இன்று முற்பகல் நிசாந்த முத்துஹெட்டிகம உடுகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் வந்து பாடல்பாடி ஆடி பிரச்சாரம் செய்துள்ளார்.
உடுகம மற்றும் காலி காவல்நிலைய உத்தியோகத்தர்கள் தேர்தல் மேடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.