எதிர்கட்சிகளின் பொதுவேடபாளர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா மற்றும் இந்தியப் பிரமதர் நரேந்திரமோடி ஆகியோரை ஒத்த முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக இலங்கை ஜனாதிபதி சார்பான முகப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் நகல்கள் தேவையில்லை என்றும் உண்மையான தலைவரே தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த முகப்புத்தகத்தில் உண்மையான தலைவரான ஜனாதிபதி மகிந்தவுக்கு வாக்களிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரப் புகைப்படத்துடன் திறக்கப்பட்ட அந்தக் கணக்கு ஓர் பதிவு செய்யப்பட்ட முகப்புத்தகமாகும். இதில் எதிர்கட்சிகளின் பொதுவேடபாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார செயற்பாடுகள் சாடப்பட்டுள்ளன.
குறித்த முகப்புத்தகத்தில் பின்னூட்டங்களை பதிவு செய்த எதிர்கட்சிகளின் பொதுவேடபாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் பலர் மகிந்த ராஜபக்சவின் நிஜமுகம் எதுவென கேட்டுள்ளனர். அத்துடன் அவரது முகத்தின் நிஜ வடிவம் கிட்லருடையதா எனவும் குறிப்பிட்டு மேற்கண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளனர்.
குளோபல் தமிழ் செய்தியாளர்