கிடைக்கப் பெற்றுள்ளன
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான கபேவிற்கு 641 முறைப்பாடுகளும், பெபரலுக்கு 444 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு அளவில் ஜனாதிபதி தேர்தலுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல பாரியளவிலான கட் அவுட்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்துள்ளதாக பெபரலின் நிறைவேற்றுப் பிணப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 444 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதில் 118 முறைப்பாடுகள் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அழைப்பினை ஏற்றுக்கொண்டு 36 சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாளைய தினம் நாட்டுக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இவர்கள் எதிர்வரும் 30ம் திகதி முதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 641 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் விதி மீறல்களை தடுக்கும் வகையில் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.