
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வனுக்கு எதிராக காய்களை நகர்த்தி வரும் தமிழரசுகட்சி பலவிதமான நகர்வுகளை செய்துவரும் வேளையில் நேற்றைய சம்பந்தனின் தொலைபேசி உரையாடலில் எந்த தீர்வும் கிட்டாத நிலையில் இன்று ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள சம்பந்தன் மாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோரை விடுப்பில் (லீவில்) அனுப்புவதற்கு விக்கினேஸ்வரனுக்கு அதிகாரல் இல்லை என புதிய தகவல் ஒன்றை முன்வைத்துள்ளார்.
தொடர்ச்சியாக முதலமைச்சர்மீது பழிகளை சொல்லிவந்த தமிழரசுக்கட்சி இன்று புதிதாக அரசியல் சாசனப்படி அமைச்சர்களை லீவில் அனுப்புவதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் தான் சொன்னமாதிரி கருமங்கள் நடைபெறுமானால் பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.