காலித் துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்! 3000 அதிகமாக ஆயுதங்கள்!

காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக நண்பகல் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அக்கப்பல் சோதனைக் உட்படுத்தப்பட்டது.


குறித்த ஆயுதங்கள் எவன்காட் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. கப்பலில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்தே பொலிஸார் அங்கு தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
ரி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம் மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதிபெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதற்குள் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila