தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடலுக்கு ஒரு சில சக்தி கள் திட்டமிட்ட வகையில் தடை களை ஏற்படுத்தியிருந்த போதும் தடைகளையும் தாண்டி நூற்றுக் கணக்கான மக்கள் பங்களிப்புடன் நேற்றைய கலந்துரையாடல் கருத் தமர்வு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் கருத்தமர் வும் கலந்துரையாடலும் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண முத லமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத் தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் மற்றும் கருத்தம ர்வு நேற்று மாலை நான்கு மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. இதன் போது சி.வி.விக்னேஸ்வரன் தலைமை உரை யுடன் கருத்தமர்வை ஆரம்பித்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வடகிழக்கு தமி ழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வ தேச சட்டம் எனும் தலைப்பில் பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா ( சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சட்டத்துறை பேராசி ரியர்) உரையாற்றினார்.
இதன் பின்னர் இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல் என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத் துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குரு பரன் உரையாற்றினார். இதன் பின்னர் முத லமைச்சர் தொகுப்புரையையும் ஆற்றியிருந் தார். அத்தோடு கேள்வி பதில்கள் வழங்கும் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் உறு ப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மதத் தலைவர்கள், கட்சிகளின தும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் பிரதி நிதிகள், பொது மக்கள் என வீரசிங்கம் மண் டபம் முழுவதுமாக பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.