மகனே! என்னை நீ வணங்கவில்லை நிலத்தில் வீழ்வதற்கு ஒத்திகை பார்க்கிறாய்

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசி வரை யாரோ!

கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள் நிறைந்த அர்த்த முடை யவை. எல்லோருக்கும் பொருந்தக் கூடியவை. எனினும் பலர், தாம் வித்தியாசமானவர்கள் என்றும் இந்த உலகில் மற்றவர்களை ஆள வும் அதிகாரம் செலுத்தவும் பிறந்த வர்கள் என்றும் நினைத்து விடு கிறார்கள்.

இதன் காரணமாக கிடைத்த பத வியை - அதிகாரத்தை துஷ்பிர யோகம் செய்வதில் இவர்கள்  இம்மி யும் கவலை கொள்வதில்லை.

இத்தகைய மனநிலை மேற் குறிப்பிட்ட தத்துவத்தை உண ராமையால் ஏற்படுகின்றதோ என்று  நினைக்கத் தோன்றும்.

இவ்வாறு கிடைத்த பதவியால் வெறித்தனமடைந்து தங்கள் வாழ் வைத் தொலைத்த பலரின் வர லாற்றை இந்த உலகம் தாராள மாகச் சொல்லி நிற்கும். அதில் ஒருவர்தான் அலரி மாளிகையில் இருந்து குடும்ப ஆட்சி, அதிகாரம்  செலுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­.

ஆம், இன்னும் இரண்டு ஆண்டு கள் அனுபவிக்கவேண்டிய அதிகா ரத்தை தொலைத்துவிட்டு இன்று அதிகாலைப் பொழுதில் அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜ பக்­ வெளியேறி யுள்ளார்.

இரண்டு தடவைகள் ஜனாதி பதியாகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்­வுக்கு 3ஆவது தடவை யும் இந்த நாட்டை ஆளவேண்டும் என்ற பேராசை இருந்ததையும் இழக்கச்செய்து விட்டது.

நிறைவேற்று அதிகாரமும் பாராளு மன்றத்தில் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலமும் சேர்ந்து  மகிந்தவின் மதியை மடக்கியது.

நானே! இந்த நாட்டின் மன்னன் என்ற ஆணவம் தலைக்கேற, மூன் றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானித்த மகிந்த,  உயர்நீதி மன் றத்திடம் ஆலோசனை பெறுவது போன்ற மாயத்தோற்றப் பாட்டை ஏற்படுத்தினார்.

சட்டப்படி 3 ஆவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற ஆலோசனையை உயர்நீதிமன்றம் மகிந்தவுக்கு வழங் கியிருக்குமாயின் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் ஜனாதிபதியாக இருந்திருக்கலாம்.

என்னசெய்வது? பரணி நட்சத் திரத்தில் பிறந்த  மகிந்த ராஜபக்­ மேடஇராசிக்காரர். மேட இராசிக்கு இப்போது அட்டமத்துச் சனி.

துண் டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டிய நிலையை ஏற்படுத்தக்கூடியது அட்டமட்டத்துச் சனி என்பது சோதிட விதி.

காலம் பிழைத்தால் கறுத்தார் தான், என்ன செய்யமுடியும்? என் பதாக மகிந்த ராஜபக்­வின் நிலை மையும் ஆயிற்று.

சோதிடர் சொன்ன நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குக் கையயாப்பமிட்டார் மகிந்த. தேர்தல் திகதி, தேர்தலுக் காகக் கையயாப்பம் இட்ட நாள், சோதிடரால் நிர்ணயிக்கப்பட்ட சுப நேரம்  என அனைத்தும் சேர்ந்து 3 ஆவது முறையும் தன்னை ஜனாதி பதியாக்கும் என்று மகிந்த நம்பியது தான் அவர் செய்த முதலாவது தவறு.

ரணிலே மகிந்தவின் எதிர்பார்ப்பு
3ஆவது தடவையாக ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகிய மகிந்த ராஜபக்­ தன்னை எதிர்த்து  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிர மசிங்கவே போட்டியிடுவார் என்று பலமாக நம்பினார். அவரின் நம் பிக்கைக்கு ஏற்றாற்போல ஐக்கிய தேசியக் கட்சியும் நடந்து கொண் டது.

எதிரணியின் பொது வேட்பாளர் நானே என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். அந்த அறிவித்தல் வெளிவந்த ஒரு சில தினங்களில் முன்னாள் பிரதம நீதியரசர் ´ராணி பண்டாரநாயக்கவை  ஜனாதிபதி வேட்பாளராக்க முயற்சி என்ற செய் தியை   எதிரணி வெளி யிட்டது.

இன்னும் சில நாட்களில் சஜித்  பிரேமதாசாவே எதிரணியின் ஜனாதி பதி வேட்பாளருக்குப் பொருத்த மானவர் என்று கதை கட்டப்பட்டது.

இதையயல்லாம் கேள்வியுற்ற மகிந்த ராஜபக்­வுக்கு தாளாத சிரிப்பு. தனது இராஜதந்திரத்தால் எதிர்க்கட்சிகள் குழம்பிப்போயுள்ள ன என்று அவர் நம்பினார்.அதன் செருக்காக என்னோடு போட்டியிட இருக்கும் அந்த வீரன் யார் என் பதை அறிய விரும்புகிறேன் என்று மிடுக்கோடு கூறினார் மகிந்த. இவ்வாறு மகிந்த கூறும்போது அவர் பக்கத்தில் மைத்திரிபால  சிறிசேன கூடவேயிருந்தார்.

வன்னியில் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலை
2005ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவின் ஜனாதிபதி ஆட் சிக்காலம் முடிந்த போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்­ போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராகக் களத்தில் இறங் கினார். அப்போது ஜனாதிபதித் தேர் தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது  தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளையாயிற்று.

விடுதலைப்புலிகள் கட்டளையிட் டால் அதற்கு மறுவார்த்தை கிடை யவே கிடையாது என்பதால், ஒட்டு மொத்த தமிழ்மக்களும் 2005 ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தனர். அன் றைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதாக இருந்திருந் தால், ரணில் விக்கிரமசிங்கவுக்கே வாக்களித்திருப்பர்.

எனினும் அத்த கையதொரு சூழ்நிலை தனது வெற்றிக்குப் பாதகமாக அமையும் எனக் கருதிய மகிந்த ராஜபக்­ அதற்காக விடுதலைப்புலிகளுக்கு பணம் கொடுத்து ஜனாதிபதித் தேர் தலை பகிஷ்கரிக்கச் செய்தார் என்ற தகவல்களும் உண்டு.

எதுவாயினும் விடுதலைப்புலி களுக்கு எதிராக சர்வதேசத்தின் உதவியோடு போர் நடத்திய ஜனாதி பதி மகிந்த ராஜபக்­ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக அப் பாவித் தமிழ்மக்களைக் கொன் றொழிக்கும் படுபாதகச் செயலைச் செய்தார்.

குழந்தைகள், பெண்கள், முதிய வர்கள் என்ற வேறுபாடின்றி பல்லா யிரக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்ட கொடுஞ்செயலை ஒரு நாட்டின் தலைவராக இருந்து மகிந்த ராஜபக்­ செய்துமுடித் தமை மன்னிக்கப்படக்கூடியதன்று.

அதுமட்டுமன்றி விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளில் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய மகிந்த ராஜபக்­ வெற் றிக்களிப்பில் நிலத்தில் விழுந்து மண்ணை வணங்கினார்.

இந்த நாட்டின் தமிழ்ப்பிரஜை கள் முள்ளிவாய்க்காலில் குருதி சிந்தி, குறையும் குற்றுயிருமாய் துடித்துக்கொண்டிருந்த வேளை யில்,  மூன்று இலட்சம் தமிழ்மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துவிட்டு நீவிர் மண்ணை வீழ்ந்து வணங்கியபோது, அன்றே நிலமகள்  நினைத்துக் கொண்டாள். நீ என்னை வணங்கவில்லை. மாறாக, 2015 ஆம் ஆண்டு ஜன வரி 8 ஆம் திகதி நீ குப்புற விழு வதற்கு ஒத்திகை பார்க்கிறாய் என்று.

ஆம், இன்னும் 2 வருடம் ஆட் சிக் காலம் இருக்கும் போது எதற்காக தேர்தலை நடத்தவேண் டும் என்று கேட்டால், வன்னியில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களின்  ஆத் மாக்கள் இட்ட சாபம் என்று பதில் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.                                                                                                            விதுரன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila