இலங்கையின் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறை அதிலுள்ள பாதகமான அம்சங்கள் களையப்பட்ட நிலையில் தொடர்ந்தும் நீடிக்கும் என தெரிவித்துள்ள ஜாதிஹ ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தின தேரர், வடக்குகிழக்கில் நிலவுவது பொருளாதார பிரச்சினை என தெரிவித்துள்ளார் சிலோன் டுடேக்கான அவரது பேட்டியிலிருந்துரு சில பகுதிகள்- தமிழில் குளோபல் தமிழ் செய்தியாளர்
கேள்வி- ராஜபக்ச அரசாங்கத்தை கவிழ்பதற்கான பேராட்டத்தில் முன்னனியில் நின்றவர் நீங்கள் தற்போது என்ன கருதுகிறீர்கள்?
பதில்- மக்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறார்கள் என கருதுகிறேன்,நாங்கள் மிகவும் கடினமான பணியை செய்தோம்,அந்த அரசாங்கத்தை வீழ்த்துவது என்பது நினைத்துப்பார்க்கவே முடியாததாக காணப்பட்டது, பொதுமக்களின் வரிப்பணத்தையும், பொதுச் சொத்துக்களையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது குறித்து அவர்கள் சிறிதளவும் கவலைப்படவில்லை, 400 பில்லியன் வரையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர்கள் செலவு செய்திருப்பார்கள், சகல சக்திகளும் இணையாவிட்டால் இது சாத்தியமாகியிராது, ஐக்கிய தேசிய கட்சியால் இதனை தனித்து சாதித்திருக்க முடியாது.
கேள்வி- சமீபத்திய நியமனங்கள் குறித்து உங்களுக்கு திருப்தியா? ஜனாதிபதியின் சகோதரர் குமாரசிங்க ஸ்ரீலங்கா டெலிகோமின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், மக்கள் குடும்ப ஆட்சி மீள திரும்புகின்றதா என்பது குறித்து அச்சமடையத் தொடங்கியுள்ளனரே?
பதில்- இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை, ஜனாதிபதிக்கு பல சகோதரர்கள் உள்ளனர், தனது குடும்பத்தவர் ஒருவரை அரச திணைக்களத்தின் தலைவராக நியமிப்பது சட்ட விராதமானதல்ல, அவருக்கு தகுதியிருந்தால் அது பிரச்சினையேயல்ல, அரச திணைக்களங்கள் முழுவதும் ஓரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டால் தான் பிரச்சினை.
கேள்வி- 100 நாட்களுக்குள் இதனை செய்வர் சரியா? குறிப்பிட்ட நபருக்கு தகுதியிருந்தாலும் இவ்வாறான நியமனங்களை மேற்கொள்ள கூடாது என நீங்கள் கருதவில்லையா?
பதில்- இந்த தருணத்தில் இது குறித்து என்னால் கருத்து கூற முடியாது,100 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டிய கடினமான முக்கிய பணி அரசமைப்பில் மாற்றங்களே,நிறைவேற்று அதிகார முறையை நீக்குவது மற்றும் தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும், ஆகவே எங்கள் முன்னுரிமை என்பது அரசியலமைப்பு மாற்றங்கள், சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்துவது தொடர்பானது, ஏனைய விடயங்களை புறக்கணிக்க வேண்டும் என நான் தெரிவிக்கவில்லை,அந்த விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் பொதுதேர்தலில் மக்களுக்கு கிடைக்கும். தெரிவு செய்யப்படும் நாடாளு மன்ற உறுப்பினாகளை பொறுத்தே அனைத்தும் அமையலாம்.
கேள்வி- உயர் அரச அதிகாரிகளை நியமிக்கும்போது என்ன நடைமுறையை பின்பற்றவேண்டும்?
பதில்- அரசஅதிகாரிகள் குழாமிலிருந்து நியமி;ப்பதே வழமையான நடவடிக்கை,பொருத்தமில்லாதவர்கள் நியமிக்கப்பட்டால் அதனை நிறுத்தவேண்டும்,மேலும் ஓய்வுபெற்றவர்களை நியமிப்பது, வெளியிலிருந்து நபர்களை கெர்ண்டுவருவது போன்றவற்றையும் நிறுத்த வேண்டும்,
கேள்வி- சில நியமனங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ரூபவாஹினி தலைவர் தொடர்பாக-
பதில்- ரூபவாஹினியின் தலைவராக சேமாரட்ண திசநாயக்க நியமிக்கப்பட்டது ஏன் பொருத்தமற்றது என எனக்கு தெரியவில்லை,சிறந்த தகுதி வாய்ந்தவர்கள் எவராவது இருந்தால் அவர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பது உண்மையே, உரிய தகுதியுடன் எவராவது காணப்படலாம் அவர்கள் நியமிக்கப்படலாம்,இவை தற்காலிக மூன்று மாத நியமனங்கள் என நான் கருதுகிறேன், திணைக்களமொன்றின் தலைவர் பதவியை விட அரசமைப்பு மாற்றங்களே எனக்கு முக்கியம்.
கேள்வி- இந்த நியமனங்கள் எல்லாம் தற்காலிகமானவை என்கிறீர்களா?
பதில்- நிச்சயமாக மூன்று மாதத்திற்கு பின்னர் இவை அனைத்தும் மாறக்கூடியவை, அமைச்சரவை பதவிகளும் தற்காலிகமானவை.
கேள்வி- ஜனவரி 21 ம்திகதி நாடாளுமன்றத்தில் அரசமைப்பு மாற்ற யோசனைகளை முன்வைப்பது என் தாமதமானது ஏன்?
பதில்- அரசமைப்பு மாற்றங்கள் குறித்து நீண்ட விவாதம் அவசியம் என நான் கருதுகிறேன்,100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் குறித்து இணக்கப்பாடு ஏற்படவில்லை, நீண்ட விவாதம் சிந்தனைக்கு பின்னர் இதனை செய்ய வேண்டும்,ஓரு மாத காலத்திற்குள் அரசமைப்பு சீர்திருத்த யோசனைகள் நாடாமன்றத்தில் சமர்ப்பிக்கப்ட வேண்டும்.
கேள்வி- ஆகவே அவை பிழையான திகதிகளா?
பதில்- நான் அப்படி தெரிவிக்கவில்லை,ஆனால் யதர்ர்த்தப+ர்வமான பிரச்சினைகள் உள்ளன.மக்கள் இவை அனைத்தையும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றினால் போதும் என நினைக்கிறார்கள், அவர்கள் எந்த திகதியில், என்ன நாளில் என்பது குறித்து கவலை அடையவில்லை. ஆகவே நாங்கள் பதட்டமடையதேவையில்லை அரசமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்கிறீர்களா? என்னவகையான நெருக்கடிகள் உள்ளன?
பதில்- பல பிரச்சினைகள் உள்ளன.நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறை ஒழிப்பிற்கும் ஓற்றையாட்சி முறைக்கும் இடையில்தொடர்புள்ளது. நீதிபதி பரின்த ரணசிங்கவின் தீர்ப்பில் இது தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் ஓற்றையாட்சி முறை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையுடன் தொடர்புபட்டுள்ளது.
இங்கு மூன்று விடயங்கள் உள்ளன. தேர்தல் முறையும் நிறைவேற்று அதிகார முறையும்கூட தொடர்பு பட்டுள்ளன. அது ஓரு தனி அலகு. கடந்த கால தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சி பெரும்பான்மை பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனினும் தற்போதைய முறையின் கீழ் இது கடினமான விடயம்.பாராளுமன்றம் எப்போதும் ஸ்திமற்றதாகவே காணப்படும்.நேபாளத்தை போல, ஆகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதையும், தேர்தல் முறைகளில் மாற்றங்களை கொண்டு வருவதையும் ஒரே நேரத்தில் மேற் கொள்ள வேண்டும் நிறைவேற்ற அதிகார முறையும் மாகாணசபைகளும் ஒற்றையாட்சி முறையும் ஓன்றுடன் ஓன்று தொடர்புபட்டுள்ளன, நிறைவேற்று அதிகார முறை ஒழிப்பு இவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது, இவற்றை கருத்திலெடுத்தே நாங்கள் அரசமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும், விகிதாச்சாரா முறையில் சில சாதகமான விடயங்கள் உள்ளன.5 வீத வாக்குகளை பெற்றால் சிறுபான்மை கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆசனங்களை பெறலாம்,ஜேவி.பி, ஜாதிஹஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கூட இதனால் சாதகத்தன்மையுள்ளது. இந்த முறையை நீக்கினால் அவர்களுக்கு இழப்பு ஏற்படலாம்.
ஆகவே முன்னைய தேர்தல் முறைக்கு செல்வது தொடர்பாக கட்சிகள்மத்தியில் இணக்கப்பாட்டை எட்ட முடியாது.
இந்த முறையின் பாதகமான விடயம் என்பது ஒருவர் முழு மாவட்டத்திலிருந்தும் வாக்குகளை பெற வேண்டும், இதற்கு பெருமளவு பணத்தை செலவிட வேண்டும், சில தொகுதிகள் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை. இதனால் உணர்வுகளை தூண்டும் முயற்சிகள் இடம் பெறுகின்றன, இதனால் நாங்கள் விகிதாச்சார முறையின் கீழ் காணப்படும் விருப்பு வாக்குகள் என்ற விடயத்தை அகற்ற வேண்டும்.
கேள்வி- நிறைவேற்று அதிகார முறையே ஏதேச்சாதிகாரத்திற்கு வழிவகுத்தது?
பதில்- இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை வரைவிலக்கணப் படுத்தப்பட்ட முறையே பிரச்சினைக்குரியது. அதன் பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஆராய வேண்டும், தீர்வுகளை காணவேண்டும், ஜனாதிபதி தான் நினைத்தால், நாடாளுமன்றத்தை கலைக்கலாம், அமைச்சரவை பதவிகளை வகிக்கலாம், அமைச்சரவையை மாற்றலாம், பிரதம நீதியரசரை நியமிக்கலாம், நாங்கள் இவற்றை நீக்க வேண்டும் . நாங்கள் இவற்றை நீக்குவது குறித்தே இணங்கினோம், நிறைவேற்று அதிகார முறையை முழுயைமாக நீக்குவது குறித்து அல்ல.
கேள்வி- ஆனால் ஜே.வி.பி போன்ற கட்சிகள் முழுமையான நீக்கதிற்காக குரல் கொடுக்கின்றனவே?
பதில்- கட்சிக்ள அவ்வாறு தெரிவிக்கலாம், வாக்களாளர்கள் மத்தியில் விகிதாச்சார முறை ஓழிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் காணப்படுகின்றது, நாங்கள் அனைவருக்கும் பொதுவான ஓரு தீர்விற்கு வரவேண்டும், ஜனாதிபதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு அவசியமற்ற மாற்றங்களை மேற் கொள்ளப் போவதாகவே உறுதியளித்தார். நிறைவேற்று அதிகார முறையை முற்றாக நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம், ஆகவெ அதனை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை முற்றாக இல்லாமல் போகது.நீடிக்கும்.
கேள்வி- நிறைவேற்று அதிகார முறை நீடிக்குமா?
பதில்- ஆம் அதிலுள்ள தீய, ஆபத்தான அம்சங்கள் அகற்றப்பட்டு அது நீடிக்கும்.
கேள்வி – அரசமைப்பு மாற்றங்களை மேற் கொள்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என தெரிவிக்க முடியுமா?மைத்திரிபால நாடாளுமன்ற தேர்தல் விகிதாச்சார முறையின் கீழேயே இடம்பெறும என்றாரே?
பதில்- இதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுக்கவேண்டும், இந்த நடவடிக்கை மக்கள் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தகூடியது.
தேர்தல் சட்ட மாற்றங்களை முதலில் கொண்டுவர வேண்டும், நிறைவேற்று அதிகார முறையை விட மக்கள் அதனையே முதலில் எதிர்பார்க்கின்றனர்,
கேள்வி- வடகிழக்கு இனப்பிரச்சினை குறித்து உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
பதில்- நாங்கள் ஒருபோதும் அதனை இனப் பிரச்சினையாக கருதவில்லை, ஆனால் அந்த மக்கள் யுத்தம் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர், நாட்டில் அதிகளவு போசாக்கின்மை நிலவும் நாடு கிளிநொச்சி, ஓருதேசமாக நாங்கள் இவற்றிற்கு தீர்வை காணவேண்டும், வேலை வாய்ப்பின்மை, மொழி, கல்வி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டும்,
கேள்வி- இனப்பிரச்சினையை வெறுமனே பொருளாதரா பிரச்சினையாக குறைத்துபார்க்கிறீர்களா?
பதில்-பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பது தேசியவாத விவகாரங்கள் உருவாவதற்கான வாய்ப்பை குறைக்கும்,1980 இல் ஜேவி.பி இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக கிளர்ச்சிசெய்தது, அது குறித்து ஆராய்ந்த ஆணைக்குழு கிராமப்புற வறுமையே இதற்கு காரணம் என தெரிவித்தது. பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டால் தேசியவாத நெருக்கடிகளை குறைக்கலாம்,
பல இடர்களின் மத்தியில் ஆங்கிலத்தில் வெளியாகும் முக்கிய கட்டுரைகளை தமிழ் வாசகர்களின் அறிதலுக்காக தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.. எமது உழைப்பின் பெறுமானத்தை உணர்ந்து குறைந்த பட்சம் தமிழில் - குளோபல் தமிழ்ச் செய்திகள் என முழுமையாக மூலத்தை குறிா்ாிட்டு மீள்பதிவு செய்யுங்கள்...