வடக்கு கிழக்கில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவ தலையீடுகளில் மாற்றங்கள் இல்லை.

சர்வாதிகார அரசாங்கத்தை அகற்றி மக்களுக்கு நல்லாட்சியையும் மாற்றத்தையும் கொண்டுவரப்போவதாக ஜனாதிபதி கூறிவருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் வாழும் பகுதிகளில் இன்னமும் மகிந்தராஜபக்ஷவால் தமிழரை நசுக்க பழக்கப்படுத்தப்பட்ட இராணுவத்தினரின் தலையீடுகளும் நெருக்குவாரங்களும் இம்மியளவும் குறைந்ததாக தெரியவில்லை.
ரோந்துகளும் புலனாய்வு துறையினரின் மோப்பங்களும் தொடர்கின்றது.இதன் மூலம் இந்த நாட்டிலும் தமிழ் மக்கள் வாழ்விலும் நம்பிக்கை வருமென நம்பி வாக்களித்த மக்களின் மனதில் அச்சமும் நம்பிக்கையின்மையிலும் ஏற்பட்டுவருகின்றது.
நேற்று கிளிநொச்சி உருத்திரபுரத்திரம் சாஜிமுன்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொள்ளச்சென்றபொழுது அங்கு இராணுவப் பிரசன்னமே நிறைந்திருந்தது.முன்பள்ளியில் இராணுவச்சீருடைகளே அதிகமாக இருந்தது அங்கிருந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதே வேளையில் பயங்கரவாத தடுப்புபிரிவால் முன்னைய நாள் போராளிகள் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

நேற்று மேற்படி முன்பள்ளி நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் உரையாற்றுகையில் உருத்திரபுரத்தின் எம் எதிர்கால சந்ததி சிறந்த முறையில் நல்லதொரு கல்விச்சூழலில் கல்வி கற்பதற்கு ஒரு அழகான முன்பள்ளியொன்றை அமைத்துக்கொடுத்துள்ள யுஎன்க பிராற் நிறுவனத்துக்கும் அதன் பொறியிலாளர் யுகநேசனுக்கும் இந்த முன்பள்ளி அமைய ஒத்துழைத்த இந்த முள்பள்ளி சமுகத்துக்கும் என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
நான் இந்த நிகழ்விற்கு வந்தபோது நிறைந்த இராணுவ பிரசன்னத்தை இங்கு பார்த்தேன்.அது மனதிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.ஒரு முன்பள்ளி நிகழ்வில் இராணவச்சீருடை பிரசன்னம் எமது மக்களையும் எமது எதிர்கால சந்ததிகளையும் ஒரு அடிமைத்தனத்துக்குள் வைத்திருப்பதையே ஆக்கிரமிப்பாளர்கள் விரும்புவதான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இராணுவ பிரசன்னம் எமது பிள்ளைகளின் உளவியலில் பாதிப்பை ஏற்படுத்தும்.சிங்கள கிராமங்களில் இப்படி இராணுவச்சீருடையுடன் இராணுவத்தின் கொடிகளையும் ஏற்றி விழாக்கள் நடக்குமா.ஒருபோதும் நடக்காது.
ஆனால் நாம் தமிழர்கள் என்ற காரணத்தால் நாம் அடிமைகள் என்ற காரணத்தால் இராணவத்தினர் இத்தகைய கீழ்த்தரமான வேலைகளை செய்துவருகின்றனர்.இந்த நாட்டினுடைய ஜனாதிபதி நல்லாட்சியை ஏற்படுத்துதாக சொல்கிறார்.முயற்சிக்கிறார்.
ஆனால் இங்கு இராணுவமோ பழைய மாதிரியே செயல்பட நினைக்கின்றது.எனவே இது தொடர்பாக நான் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த இருக்கின்றேன்.எமது பிள்ளைகளின் கல்லறைகளின் மீது இராணுவம் ஏறிமிதித்து அசிங்கம் செய்யும் வரை இராணுவம் எமது நண்பர்களாக முடியாது.நாம் கடந்த எட்டாம் திகதி தெளிவாக வாக்களித்து மைத்திரிபாலசிறிசேனா அவர்களை ஜனாதிபதி ஆக்கியது.
நாம் தொடர்ந்தும் அடிமை வாழ்வுக்குள் வாழ்வதற்கு அல்ல.எனவே இந்தச்செய்தி இராணுவ மற்றும் அரசாங்க மேலிடங்களுக்கு சென்று சேரவேண்டும் என தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila