இலங்கையின் புதிய அரசாங்கம் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை பணியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களை, தடுக்கவேண்டும், விசாரிக்கவேண்டும்,அதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். இலங்கையில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஓடுக்குமுறை ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. அதேபோன்று தாக்குதல்கள், காணாமற் போகச்செய்யப்படுதல், மற்றும் சட்டத்தின் ஆட்சிக்காகவும், கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும் எனவும் குரல் கொடுத்த சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களும் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். இலங்கையின் புதிய ஜனாதிபதி,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு ஓத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். |
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு புதிய ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும்! - ஜெனிவா மனித உரிமை அமைப்பு கோரிக்கை
Related Post:
Add Comments