ஆட்சி மாற்றம் வந்தாலும் தமிழர்களை கைவிடோம்

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தமி ழர்களை மேற்குலகம் கைவிடாது என யாழ் வந்த அமெரிக்காவின் அரசியல் விவகாரங்க ளுக்கான உயர் அதிகாரி மிச்செல் எர்வின், வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் உறு தியளித்துள்ளார்.

யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபையின் தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம் 12.30 மணியளவில் மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடனான சந் திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு உறு தியளித்துள்ளதாக சிவஞானம் ஊடகங்களு க்குத் தெரிவித்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக சிவஞானம் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் இலங்கை மீதான சர்வதேச மனித உரிமை கள் விசாரணைகளில் தொய்வு நிலை ஏற்படக் கூடாதெனவும் எதிர்வரும்  மார்ச் மாதம் nஐனி வாவில் இடம்பெறவுள்ள விசாரணையின் போது மேற்குலகம் தனது நிலைப்பாட்டிலிரு ந்து மாறுபடக் கூடாதெனவும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

மேலும் நீண்டகாலமாக சிறைகளில் தடு த்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி களின் விடுதலை, இராணுவ வசமுள்ள பொது மக்களின் காணிகள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள பொது மக்களின் மீள்குடி யேற்றம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசு அக்கறை செலுத்த வேண்டும்.

போரினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள மாகாணம் என்ற வகையில் வடக்கு மாகாண சபையின் புதிய அரசிடம் கோரிக்கையாக முன்வைத்திருக்கின்றோம்.

இங்கு 18 ஆயிரம் மாற்று திறனாளிகள், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள், 17 ஆயிரம் ஆதரவற்ற வர்களை சாதகமாகப் பரிசீலித்து வடக்கு மக் களின் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலி வடக்கில் அபகரிக்கப்பட்டுள்ள 6381 ஏக்கர் காணிகள் ஆகியவற்றை விடுவிப்பதற்கு எந்தவித தடங்கல்களும் காணப்படாதத னால் இவற்றை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக விடுவிக்க முடியும்.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிர தம செயலாளரின் மாற்றமானது இந்த அர சின் மாற்றத்துக்கான மாற்றமாகவே தென்படு கின்றது. மேலும் இப் புதிய அரசின் தமிழர் கள் தொடர்பான அணுகுமுறை சிறிதுகாலம் செல்லும்போதுதான் மதிப்பிடக் கூடியதாக அமையும்.

இந்த மாகாணத்திலுள்ள வீதிகள் தொடர் ப்பில் பல விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு வருகின்றன. அதாவது பிரதான வீதிகள் தான் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி என்று காட்டப்படுகிறது.

ஆனால் உள்ராட்சி வீதிகள் புனரமைக்ப்படவில்லை இதுதான் யதார்த்தம். ஆகவே இந்த நிலை மாற்றப்பட்டு மாகாண சபைக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரியிருந்தேன்.

இத்தகைய கருத்துக்கள் கோரிக்கைகளின் பின்னராக இதற்குப் பதிலளித்த அமெரிக்க அதிகாரி தெரிவிக்கையில், இலங்கை தொடர்பில் கடந்த கால அமெரிக்க நிலைமைகளில் எந்தவித மாற்றமும் இல்லை.

அதா வது இலங்கையில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற மனித உரிமைகள் மீதான சர்வதேச விசாரணைகள் தொடருமென்றும் மிச்செல் எர்வின் மேலும் குறிப்பிட்டுள்ளதா கவும் சிவஞானம் தெரிவித்தார்.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila