குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயங்களுக்குள்ளானதுடன், ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் மரணச்சடங்கு இன்றைய தினம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக சென்ற மானிப்பாய் பொலிஸார் குறித்த பகுதியில் மரண வீட்டில் கலந்து கொண்டிருந்த மக்களை கண்மூடித்தனமாக தாக்கியதுடன், தன்னுடைய சகோதரி வீட்டுக்கு எண்ணெய் வாங்குவதற்காகச் சென்ற 14 வயது மாணவனையும் அவனுடைய தந்தையையும், கைதுசெய்வதற்கு முற்பட்டு வாகனத்தில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். பின்னர் குறித்த சிறுவனை தனிமையில் வைத்து விசாரித்த பொலிஸார் பின்னர் சிறுவனையும், தந்தையையும் விடுதலை செய்துள்ளனர். மேலும் குறித்த சிறுவனையும் தந்தையையும் எதற்காக கைது செய்கிறீர்கள்? என வினவிய மக்களையும் பொலிஸார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
சுழிபுரத்தில் மரண வீட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்
Related Post:
Add Comments