பணம் கொடுத்தவரை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஏமாற்றியதையடுத்து, பாதிக்கப்பட்டவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சந்தேகநபர் பிரான்ஸில் வசித்து வருவதால், இலங்கை வரும் போது அவரைக் கைதுசெய்யும்படி குடிவரவு குடிஅகல்வு அதிகாரிகளுக்கு பொலிஸார் அறிவித்தனர். கடந்த 18 ஆம் திகதி அதிகாலை 2.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சந்தேகநபர் இலங்கை வந்த போது சந்தேகநபரை கைது செய்த குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். சந்தேகநபருக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை கருத்திலெடுத்த நீர்கொழும்பு நீதவான் சந்தேகநபரை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். இவரை பொறுப்பேற்ற பொலிஸார், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள். தனக்கு பிணை வழங்குமாறு மேற்படி நபர், தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் கோரினார். மேலும் இருவரை கைதுசெய்வதற்காக இந்நபரிடம் விசாரணைகளை நடத்த வேண்டியிருப்பதால் பிணை வழங்கவேண்டாம் என பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, சந்தேகநபரை விளக்கமறியில் வைத்த நீதவான், அவரை வவுனியா சிறைச்சாலையில் வைத்து விசாரணை செய்யுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். |
பிரான்சில் இருந்து சென்றவர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைப்பு! - பணமோசடிக் குற்றச்சாட்டு
Related Post:
Add Comments