மகிந்தவின் புதையல் அம்பலம்


news மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த  காலப்பகுதயில்  அவரது கட்டுப்பாட்டில் இருந்த அலரி மாளிகையில் இருந்த பெருந்தொகைப் பணமும், நகைகளும் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
 
அத்துடன் அலரி மாளிகைக்குள் புதிது புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
 
 
புதிய அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று தனது கடமைகளை அலரி மாளிகையில் ஆரம்பித்தார்.
 
அதன்பின்னர் மாலையில் தனது கட்சி அமைச்சர்கள்.பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.அதற்கு ஊடவியலாளர்களும்  அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
 
கலந்துரையாடலின் முடிவில் அலரி மாளிகையைச் சுற்றிப் பார்க்க அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.அதன் போதே பெரும் தொகையான நகைகள்,500 மில்லியன் ரூபா வரையிலான பணம் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
 
அங்கு புதிது புதிதாக கட்டடங்கள் முளைத்திருப்பதும்,ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு இணையாக அவை
அமைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
 
அதனைவிட அங்கு ஆயிரக்கணக்கான கணினிகள்,அதற்குரிய மல்ரி பிரின்டேஸ் என்பன பெருந்தொகையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
 
அத்துடன் பல்வேறு முக்கிய கோப்புகளும் அங்கு காணப்பட்டுள்ளன.அவற்றை நேரில் பார்த்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
 
மகிந்த குடும்பம் அனைத்தையும் கைவிட்டு,உயிரை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.அவர்களை இவ்வாறு
விரட்டியடித்தது, உயிரிழந்த தமிழ் மக்களின் ஆத்மாக்களே.ராஜபக்சவினர் காப்பெட் வீதிகள் அமைத்தது
போக்குவரத்தை இலகுபடுத்தவல்ல.மண்ணில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் வெளித்தெரியாமல் இருப்பதற்கே என்று அவர் குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila