பொன்சேகா காலத்தின் படு கொலைகளும் கசிந்தது….

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பல இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியவர். இவரின் படை நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களைப் பற்றி என்றும் இவர் சிந்தித்தாரா இல்லை காரணம் அன்றும் அவர் தமிழரை மதித்ததில்லை இன்றும் மதிக்க மாட்டார் என்பது மட்டும் உண்மை இழந்த பதவி சிங்கள மக்களால் அல்ல மாறாக தமிழ் மக்களாளே மீண்டும் பொன்சேகாவிற்கு கிடைத்தது
காரணம் தமிழர்களின் வாக்குப் பலம் ஜனாதிபதியைத் தீர்மானித்தது அதன் பயன் பொன்சேகாவிற்கு இழந்த பதவி ஊதியம் கிடைத்தது இதை அவர் தான் உணர்வாரா அல்லது அவரின் குடும்பம் மற்று சிங்கள மக்கள் உணர்வார்களா நிச்சயம் இல்லை

இன்று நல்லாட்சி என பொன்சேகா கூறினாலும் விடுதலைப் புலிகள் ரணில் ஒப்பந்த காலத்தில் உயர் பாது காப்பு வலயத்தை நீக்க முடியாது என கூறியவர் இன்று வரை நடந்த வற்றிற்கு மன்னிப்பு கேட்டாரா இல்லை அது அவரின் திமிர் இவர்களை என்றும் தமிழர்கள் நம்ப மாட்டார்கள் இவர்கள் நல்லவர் என்று யாரும் தமிழ்த் தலைமை கூறினால் அவர் துரோகி
சரத் பொன்சேகா
முன்னாள் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர்களான திரு நடேசன், திரு புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாக விடுத்த அறிவிப்பின் அடிப்படையில்
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பாளரான லுயிஸ் மொரினோ ஒக்கம்போ, விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட குறித்த சம்பவத்தினை  மட்டுமல்லாது சனவரி 20009 முதல் மே 2009 வரையிலான இறுதியுத்தத்தின் போது சிறீலங்கா ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பிக்க  வேண்டுமெனவும்,
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இந்தப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றினை ஐ நா பாதுகாப்புச்சபையின்  கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும்,
சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தின் பங்குதரார்களான நாடுகள் இந்த விடயத்தினை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும், அறைகூவல் விடுகின்றது.
கடந்த மே மாதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முற்பட்டவேளையில், அவர்களைக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஐபக்ச உத்தரவிட்டதாக இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையில் டிசம்பர் 13 வெளிவந்த நேர்காணலொன்றில் ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
முதலில் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் செல்லுமாறு தெரிவித்தல் பெற்ற இரு புலிகள் இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான சனாதிபதியின் சகோதரர் நேரடியாக இராணுவ தளபதிகளுக்குப் பணித்தமையை அரசாங்க ஊடக செய்தியாளர்களின் மூலம் தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா தனது கூற்றினைப் பின்னர் மறுத்தபோதும் சண்டே லீடர் நேர்காணல், மனித உரிமைகள் அமைப்புகளது அறிக்கைகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினது அறிக்கை, இது தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகின்றன.
மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் விடயத்தில் இலங்கை இதுவரை நடந்துகொண்ட முறையும் (1977, 1983 இனப் படுகொலை, 1981ம் ஆண்டு யாழ்ப்பாண நுரலக எரிப்பு, 1996ம் ஆண்டு செம்மணி படு கொலைகள், 1996 கிருசாந்தி படுகொலை, 2006ம் ஆண்டு பிரான்ஸ் உதவிப் பணியாளர்கள்), அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கையில் தண்டனைகள் தவிர்க்கப்படுவது எவ்வாறு பிரச்சினையாகவே உள்ளதாகத் தொடர்ச்சியாகவும் மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருவதும் இலங்கையில் உள்நாட்டு விசாரணையைக் கோருவதனை கேலிக் கூத்தாக்குகின்றது.
உள்நாட்டு விசாரணைகள் பயனற்றவையாக அமையுமென்று தெரிந்தால் சர்வதேச விசாரணைக்கு முன்னோடியாக உள்நாட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமில்லை என்பது நன்கு நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகளிலொன்றாகும்.
சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்படாமல் இருப்பது உலகளாவிய தமிழ் சமூகத்தினரிடம் நிலவும் ஏமாற்றப்பட்ட உணர்வினை மேலும் ஆழப்படுத்தும். சர்வதேச  சமூகத்தின் செயற்படாத் தன்மையானது சர்வதேச நிறுவனங்களின் நம்பகத் தன்மையைப் பாதிப்பதுடன் நீதிசார்ந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கவும்பண்ணும். மேலும் சர்வதேச ஒழுங்குமுறையற்ற அரசுகள் மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சகல மனிதாபிமானச் சட்டங்களையும் தங்கள் கைகளில் எடுப்பதையும் இது ஊக்குவிக்கும.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila