கொழும்பில் திறக்கப்பட்ட உயர்பாதுகாப்பு வலைய வீதிகளில் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான வாகனங்கள்

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்பட்டவையா? காணொளி இணைப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:-


கொழும்பில் இன்று திறந்து விடப்பட்ட உயர்பாதுகாப்பு வலையப் பகுதியில் கோடிக்கணக்கான இலங்கை ரூபாய்கள் பெறுமதியான பல்வித வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வீதிகளில் நிரையாக அடுக்கி விடப்பட்டு இருந்த வாகனங்கள், தூசி படிந்தனவாக காணப்பட்டதாகவும், வெள்ளை வான்கள், வெள்ளை டிறக்குகள், கறுப்பு மற்றும் வேறு நிறங்களிலான வாகனங்கள், இலக்கத் தகடு உள்ளவை, இலக்கத் தகடுகள் அற்றவை, புதியவை, பழையவை என பலவித வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்ததால் பாவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்க இவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பாவிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு உள்ளார்.

உயர்பாதுகாப்பு வலையங்கள் எனக் கூறப்பட்டு மூடப்பட்ட வீதிகளில் எதற்காக இவ்வளவு தொகை வாகனங்கள் நிரைப்படுத்தப்பட்டு  இருப்பதாக கேள்ளி எழுப்பிய ஜோன் அமரதுங்க இவை பற்றிய முழு விசாரணைகள் இடம்பெறும் எனவும் பின்னர் அவை குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila