1972 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழர்களின் முக்கிய தலைவர்கள் எவரும் பங்குபற்றவில்லை. இந்த நிலையில் 43 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை சிறி ஜெயவர்த்தனபுர, நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பங்கேற்றார். ஏற்கனவே இன்றைய நிகழ்வில் சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை. இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது. அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும்போது இரா. சம்பந்தனும் முக்கிய புள்ளியாக இருந்தார்.
![]()
1972ம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் தமிழ்த் தலைமை
Related Post:
Add Comments