இலங்கையின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகள் 550 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளிலிருந்து 10 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதன்படி, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 கைதிகள் இன்று புதன்கிழமை விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்கள் புரிந்தவர்கள், நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்த முடியாது சிறையில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் 7 கைதிகள் வவுனியா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று யாழ்.சிறைச்சாலையிலிருந்த 3 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவருமே விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.இன்று புதிய அரசினால் அடையாளமாகவேனும் எவராவது விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவ்வாறு எவரும் விடுவிக்கப்படவில்லை.
Add Comments