ஜூன் 21, 2015 அன்று சுமந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களுக்கு (Tamils Relief <tamils.relief@gmail.com>)எழுதிய கடிதமொன்றில், உள்நாட்டு பொறிமுறை இல்லையெனில் செப்டெம்பர் வெளியாக உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது வெறுமனனே அறிக்கையுடன் நின்றுவிடும் அது ஜெனிவாவில் ஒரு அறையிலேயே இருந்துவிடும் என்று கூறியுள்ளார்.
சுமந்திரன் அனுப்பிய கடிதத்தின்ஆங்கில உள்ளடக்கமும் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது.
"I have said that after the tabling of the report there has to be a domestic mechanism ... Otherwise that report will sit on a shelf in Geneva."
'நான் சொல்வது என்னவெனில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஒரு உள் நாட்டு பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லாவிடில் அது ஜெனிவாவில் ஒரு அலுமாரியில் தான் இருக்க வேண்டி வரும்.' என்று எழுதியுள்ளார்.
இது பற்றி ஐ. நா மனித உரிமைகள் அமைப்பில் பொறுப்பாக உள்ள அதிகாரியோடு ஒபாமாவுக்கன தமிழர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் உரையாடிய போது, சுமந்திரன் கூறும் விடையத்தில் எவ்வளவு உண்மை உள்ளது என்று கேட்டபோது, அதைக்கேட்ட அதிகாரி வியந்து போய்விட்டார். அதன் மூலம் சுமந்திரன் உண்மையை சொல்லவில்லை என்பது தெரிந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினால் ஏற்கனவே மேற்கொண்ட (பிற நாடுகளில்) நடவடிக்கை பற்றி விபரங்களை எம்மிடம் மின் அஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.
இவை எல்லாம் தெரிந்து கொண்டு சுமந்திரன் உண்மையை மறைக்கின்றாரா?. ஏன் இப்படியாக செய்கின்றார்?
சுமந்திரனும் இலங்கை அரசு வைக்கும் அதே கோரிக்கையைத் தான் ஐ.நா மனித உரிமைச் சபையில் கடந்த மார்ச் மதம் 7ம் திகதி கேட்டார். ஆனால் தமிழ் மக்களுக்கு வந்து சொன்து "இலங்கை போர் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிடப்பட கூறியதாய்" ஆனால் இது உண்மை இல்லை.
அதே வேளை இலங்கை அரசு பயன்படுத்தும் அதே வார்த்தைப் பிரயோகங்களையே சுமந்திரனும் பயன் படுத்தி புலம் பெயர்ந்த தமிழருக்கான கடிதத்தினை எழுதியுள்ளார். இக் கடிதத்தின் மூலம் சுமந்திரன் தனது நோக்கத்தையும் சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ளார்
இதன் மூலம் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியையும் குளிதோண்டி புதைக்கும் அதே வேளை புலம் பெயர்ந்த மக்களையும் முட்டாளாக்கப் பார்க்கின்றார்.
அத்துடன் ரணில் அவர்கள் கருணாவை விடுதலைப்புலிகளில் இருந்த பிரித்து அதன் மூலம் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கு வழிவகுத்தாரோ அதே போன்று புலம்பெயர்ந்த மக்களை அவர்களது விடுதலைக்கான குரலையும், இனப்படுகொலைக்கான குரலையும் அழிப்பதற்கு இந்த சுமந்திரனை சிங்கள அரசு பயன் படுத்தப்படுகின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது.
- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு!
சுமந்திரன் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள வெறியர்களை காப்பாற்ற முயல்கின்றார்.- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு!
Related Post:
Add Comments