சண்டே லீடர் பிரதம ஆசிரியர் திடீர் இராஜினாமா

‘சண்டே லீடர்’ ஆங்கில வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சகுந்தலா பெரேரா அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து தான் அண்மையில் எழுதிய இரு கட்டுரைகள் தொடர்பில் முகாமைத்துவமும், நிர்வாகமும் தந்த அழுத்தங்களே தனது இராஜினாமாவுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
High- Flying Corruption in Aviation மற்றும் The Rs. 40 Billion Computer Scam எனும் முன்னைய ஆட்சிக்கால ஊழல் மோசடி தொடர்பிலான, பத்திரிகையில் பிரசுரமான தமது கட்டுரைகள் தொடர்பில், முன்னாள் ஆட்சியாளர் சார்பு நிர்வாகமும் முகாமைத்துவமும் தமக்கு கடும் நெருக்குதல்களைக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவன உரிமையாளர் அசங்க செனவிரத்ன மற்றும் நிறைவேற்று அதிகாரி நளின் ஜெயதிலக ஆகியோர் சுயமாக இயங்க விடாமல் அடிக்கடி தமக்கு மன அழுத்தங்களைக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அசங்க செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவின் முன்னாள் ரகர் பயிற்றுவிப்பாளர் என்பதும், குறுகிய காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த விமர்சனங்களுக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila