வல்வெட்டித்துறைச் சிவன் கோவிலுக்குச் சென்றவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டார்!

வல்வெட்டித்துறையில் நேற்று ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார். கரணவாய் வடக்கைச் சேர்ந்த கண்ணன் என்று அழைக்கப்படும் இராசன் தயானந்தன் (வயது 41) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவர். சிவராத்திரி தினமான நேற்று வல்வெட்டித்துறை சிவன் கோவிலுக்கு சென்று வருதாக கூறி 4 மணியளவில் சென்ற இவர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் மாலை 5.45 மணிக்கு அவரது கையடக்க தொலைபேசியில் இருந்து, அழைப்பை ஏற்படுத்தியவர்கள் தயானந்தனின் சைக்கிள் பேர்ஸ் துவிச்சக்கரவண்டி அடையாள அட்டை என்பவை பொலிகண்டி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக கிடப்பதாக தெரிவித்தனர். அங்கு சென்ற அவரது குடும்பத்தினர் அந்த பொருட்களை எடுத்த பொழுதும் தேசிய அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.இது தொடர்பாக தயானந்தனின் உறவினர்கள் வல்வெட்டித்துறை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila