அகதிகள் இலங்கை திரும்புவதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்.

1
இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் இலங்கை திரும்புவதை சாதகமாகப் பரிசீலனை செய்யும் நிலைமையை உருவாக்குவதற்கு அந்த மக்களின் தாயகமான இலங்கை அரசு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருக்கின்றன என்று ஐ.நா. சபை யின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரோனியோ குட்டெறஸ் யோசனை தெரிவித்திருந்தார். வாழ்க்கை நிலைமை, வேலை, கல்வி, சுகாதாரம், சொத்து, பாது காப்பு என்பவற்றுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுக்கவேண்டும். மக்களின் நம்பிக்கையைக் கட்டியயழுப்ப இயலுமான சகலவற்றையும் இலங்கை அரசு செய்யவேண்டும் என்றும் அன்ரோனியோ குட்டெறஸ் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த இவரது கருத்துத் தெரிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் அகதிகள் இலங்கை திரும்புவதற்கு இன்னும் அக்கறை காட்டவில்லை. அதற்கான சூழ்நிலையும் உருவாக்கப்படவில்லை.
2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் சுமார் 8 ஆயிரம் அகதிகள் தமது சுயவிருப்பத்தின்பேரில் இலங்கை திரும்பினார்கள். இப்படி வந்தவர்களில் சிலர் மீண்டும் இந்தியா திரும்பிச்சென்றுவிட்டனர். அவர்களின் எதிர் பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை. தற்பொழுது மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து மீண்டும் பேசப்படுகிறது. ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றன. அதுவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது டில்லி சென்றிருப்பதால் மீனவர் பிரச்சினையுடன் அகதிகள் பிரச்சினை குறித்தும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி, அகதிகள் இலங்கை திரும்புவ தற்குத் தேவையான உத்தரவாதங்களை வழங்குவது அவசியமாகும். இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் தமிழ்மக்களுக்குத் துளியளவு நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இறுக்கம் சற்றுத் தளர்ந்திருக்கிறது. இராணுவத்தின் பிடி சற்று விலகி மக்கள் ஆசுவாச மூச்சுவிடுகிறார்கள். எனினும், அடிப்படைப் பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றன. அகதிகள் நாடு திரும்புவதற்கான சூழ்நிலைகள் இன்னும் ஏற்படுத்தப் படவில்லை.
வடக்கில் இராணுவ இருப்பைக் குறைக்கப்போவ தில்லை என்று புதிய அரசு தெளிவாகச் சொல்லிவிட்டது. போரால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் தங்கள் நிலங்களில் மீளக்குடியமர்த்தப்படவில்லை. வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்கள், குடியிருப்புகள் இராணுவத்தின் கரங்களுக்குப் போய் விட்டன. சம்பூரில் இந்தியாவின் ஒத்துழைப்போடு அனல் மின்நிலையம் அமைப்பதற்காக 1,500 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு உரிய இழப்பீடோ, மாற்றுக் குடியிருப்புகளோ வழங்கப்பட வில்லை. கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இப்படியான நிலையில் அகதிகள் திரும்பி வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, அகதிகள் இலங்கை திரும்புவது இலங்கை அரசின் கையிலேயே தங்கியுள்ளது.
இராணுவ மயமாக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் தமக்குப் பாதுகாப்பு இருக்குமா என்பதே அகதிகளின் முக்கிய பிரச்சினை என்று நம்பப் படுகிறது. தமது குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்புகளை விட பாதுகாப்புக் குறித்தே இவர்கள் கூடுதல் கரிசனை காட்டுகின்றனர். அகதிகள் இலங்கை திரும்புவது தொடர் பாக அவர்களின் முகாம்களில் இதுவரை 17 கலந்து ரையாடல்களை நடத்திவிட்டோம். பெரும்பாலான அகதி கள் இலங்கை திரும்பிச் செல்லவே விரும்புகிறார்கள் என்கிறார் ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலை வர் சந்திரகாசன். இலங்கைக்கு தாம் திரும்பிச் செல்ல வேண்டுமானால், தங்களின் பாதுகாப்பை ஐ.நா. உறுதி செய்ய வேண்டும். வடமாகாணத்திலுள்ள இராணுவத்தை இலங்கை அரசு திரும்பப் பெறவேண்டும் என்று அகதிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் நடந்த சுதந்திர தின விழாவில் புதிய ஜனாதிபதி உரையாற்றுகையில், போரில் வென் றாலும் வடக்கு, கிழக்கு மக்களின் நல்லெண்ணத் தைப் பெறமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்ப தன் மூலம் அவர்களின் மனங்களை வெல்லமுடி யாது. அரசியல் தீர்வு உட்பட அடிப்படைப் பிரச்சினை களுக்குத் தீர்வு காணப்படவேண்டும். அப்பொழுது அகதிகளின் பிரச் சினையும் தீர்ந்துவிடும். இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து அகதிகள் தாமாக இலங்கைக்குத் திரும்பிவர வாய்ப்புகளை சூழ்நிலையை ஏற்படுத் திக்கொடுக்கவேண்டும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila