ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு எவ்வித தகுதியும் இல்லை என்று கட்சியின் பொருளாளர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
எமது கட்சியில் பிரதமர் வேட்பாளரை தெரிவு செய்யக்கூடிய திறமையான சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக எஸ்.பி.நாவின்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் அவர் கட்சியிடம் விண்ணப்பம் ஒன்றினை சமர்பிக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்ட்சியினை அழிப்பதற்கு சிலர் முயற்சிக்கிறனர் இதற்கு மக்கள் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.